வங்கிப் பணி முடக்கத்தால் ரூ.21,500 கோடி காசோலைகள் தேக்கம்

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் 21,500 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் தேக்கமடைந்து உள்ளதாக வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நடைபெற்று வந்த வேலைநிறுத்தத்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

இதனிடையே சென்னை, திருவொற்றியூரில் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் சென்னை, டெல்லி, மும்பை நகரங்களில் 21 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் பரிவர்த்தனை முடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.


Leave a Reply