தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும்

தமிழகத்தின் பல இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தெற்கு பொய்கைநல்லூர், பறவை உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

 

இதில் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் பரவலாக மழை பெய்தது.

 

நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பொங்கல் திருநாளையொட்டி அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் பாதிக்கப்பட்டதால் கரும்பு விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி, கட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது.

 

இந்நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.


Leave a Reply