நடிகர் வடிவேலு உதவியாளர் மீது தயாரிப்பாளர் புகார்

நகைச்சுவை நடிகர் வடிவேலு உதவியாளர் தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். மதுரையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்தின் நிறுவனரான சதீஷ்குமார் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் வடிவேலுவை வைத்து எலி என்ற படத்தை தயாரித்துள்ளார்.

 

இந்த படத்தின் மூலம் 9 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதால் தயாரிப்பாளருக்கும், நடிகர் வடிவேலுவின் தரப்பிற்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் சதீஷ் குமாரின் வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டதோடு கோவிந்தராஜ் என்பவரையும் தாக்கியுள்ளார்.

 

புகாரின்பேரில் மணிகண்டன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply