--- --:--:-- --

அரசு பெட்ரோல் பங்கில் அமைச்சரின் காருக்கு பெட்ரோல் போட மறுப்பு

4

புதுச்சேரியில் கடன் பாக்கியால் அரசுக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் அமைச்சரின் காருக்கு பெட்ரோல் போட மறுப்பு தெரிவித்த சம்பவம் ஆட்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபியில் சொந்தமான பெட்ரோல் பங்குகளில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி வருகின்றனர். இதற்கான தொகையை புதுச்சேரி அரசு செலுத்தி வருகிறது. இந்நிலையில் இரண்டரை கோடி ரூபாய் பாக்கி வைத்ததால் டிசம்பர் 31ம் தேதிக்கு பின் எந்த ஒரு அரசு வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க முடியாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் ஜனவரி 2ஆம் தேதி இரவு காரைக்காலுக்கு சென்றிருந்த வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் காருக்கு அங்குள்ள அரசு பெட்ரோல் பங்கில் எரிபொருள் தர மறுத்ததால் அவர் அரசு பேருந்தில் புதுச்சேரி வந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon