நாடு முழுவதும் பேட்டரி வாகனங்கள் சார்ஜ் செய்யும் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்யக்கூடிய நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

 

மின்சார வாகனங்களை பயன்படுத்துவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான நிலையங்களை அமைக்க முடிவெடுத்திருப்பதாக அமைச்சர் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மின்சார வாகனங்களின் உற்பத்தியை இது ஊக்கப்படுத்தும் விதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தற்போது இத்திட்டத்தின்படி மகாராஷ்டிராவில் 317 இடங்களிலும், குஜராத்தில் 228 இடங்களிலும், ராஜஸ்தானில் 205 இடங்களிலும் பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்யக்கூடிய நிலையங்கள் அமைக்கப்படும் என பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். தென் இந்தியாவை பொருத்தவரையில் தமிழகத்தில் 256 இடங்களிலும், ஆந்திராவில் 266 பேட்டரி சார்ஜ் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.


Leave a Reply