அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் உடல் நலக் குறைவால் காலமானார்.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த கோவிந்தப்பேரியில் 1945-ல் பிறந்த பி.எச்.பாண்டியனுக்கு 75 வயதாகிறது.சட்டம் பயின்ற இளம் வயதிலேயே வழக்கறிஞராக சிறப்பாக பணியாற்றிய பி.எச்.பாண்டியன், எம். ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் 1977, 80,84 ஆகிய ஆண்டுகளில் சேரன்மாதேவி தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்.
1984-ல் எம்ஜிஆர் ஆட்சியில் சபாநாயகராக பணியாற்றிய போது, சபாநாயகருக்கான அதிகாரம் வானளாவிய து என்று கூறி, நீதிமன்றத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததை நாடே பரபரப்பாக பேசியது.
பின்னல் 1989-ல் அதிமுக ஜானகி அணி சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏவும் இவர் ஒருவர் தான். பின்னர் நெல்லை தொகுதி எம்.பி. ஆகவும், அதிமுக அமைப்புச் செயலாளராகவும் இருந்தவர். கடந்த சில நாட்கைாக உடல் நலக்குறைவால், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பி.எச்.பாண்டியனின் உயிர் இன்று காலை பிரிந்தது.
பி.எச்.பாண்டியன் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.