வன்முறை செய்தது யார்? : நடிகர் ரஜினிகாந்துக்கு சீமான் கேள்வி

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை செய்தது யார் என நடிகர் ரஜினிகாந்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றன.

 

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை குறிப்பிடாமல் எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள சீமான் பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகாது எனவும் போராட்டத்தில் வன்முறை செய்தது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றி ரஜினியின் கருத்து என்ன என கேள்வி எழுப்பியுள்ள அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை ரஜினிகாந்த் எதிர்க்கிறாரா என்பதை முதலில் சொல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

அடக்குமுறையை ஒடுக்கு முறையை மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாரும் கொச்சைப்படுத்த முடியாது எனவும் நடிகர் ரஜினியின் கருத்துக்கு சீமான் விமர்சித்துள்ளார்.


Leave a Reply