உறவினர் வீடுகளில் கள்ளச்சாவி போட்டு காதல் ஜோடி கொள்ளை
சென்னை வளசரவாக்கத்தில் உறவினர்களின் வீடுகளில் போலிகொ சாவியை கொண்டு கொள்ளையடித்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூர் அடுத்த காரப்பாக்கம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்த ஜெகதீஷ் பாண்டியன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்ததை அடுத்து வளசரவாக்கம் போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது ஒரு ஆணும் பெண்ணும் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே செல்வது பதிவாகியிருந்தது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கேட்டபோது தனது உறவினர் மகன் என தெரிவித்தார்.
இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் கோயம்பேட்டை சேர்ந்த கார்த்திகேயன் மேலும் மதுரைவாயிலை சேர்ந்த அவரது காதலி நித்யா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
சொந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கொள்ளையடிக்க முடிவு செய்த அவர்கள் உறவினர் வீடுகளுக்கு நலம் விசாரித்து செல்வதைப் போன்று விசாரித்துவிட்டு நகை வைக்கும் இடங்களை தெரிந்து கொண்டு தொடர்ந்து கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள். கதவுகளை உடைக்காமல் கொள்ளையடிக்க போலி சாவிகளை அவர்கள் பயன்படுத்தியது தெரிய வந்திருக்கிறது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




