--- --:--:-- --

விற்பனைக்கு வந்துள்ள வரட்டி! 10 வரட்டியின் விலை எவ்ளோ தெரியுமா?

5

சமையல் எரிவாயு வருவதற்கு முன்னர் இந்திய கிராமங்களின் முக்கிய எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வந்த வரட்டி தற்போது அமெரிக்காவின் மளிகை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

 

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பேக் செய்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வரட்டியை பார்த்த பத்திரிக்கையாளர் ஒருவர் அதன் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

 

இவை மத சடங்குகளுக்கு மட்டுமே, உண்பதற்கு அல்ல என்று எச்சரிக்கை வாசகத்துடன் 10 வறட்டிகள் கொண்ட பாக்கெட் இந்திய மதிப்பில் 215 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

 

இன்றுவரை இந்துக்களின் மிக முக்கிய சடங்குகளில் பயன்படுத்தப்பட்டு வரும் வரட்டி தற்போது இந்தியாவை கடந்து உலக அளவில் பிரசித்தி அடைந்திருப்பதை ரீட்வீட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon