ரெஜினா கண்முன்னே காரை திருடிச் செல்லும் மர்ம நபர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் திருடி செல்லப்பட்ட காரை தடுத்து நிறுத்த முயன்றவரை தள்ளிவிட்டு காருடன் மர்ம நபர்கள் தப்பி சென்று சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சின்னசேலத்தில் வசித்து வரும் ரெஜினா அவரது காரை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்தார்.

 

இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் ரெஜினாவின் காரை திருட முயன்று உள்ளனர். அப்போது காரில் அலாரம் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த ரெஜினா மர்ம நபர்கள் தனது காரை திருட முயல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

ரெஜினாவின் கண்முன்னே அவர்கள் காரை திருடிக் கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து தனது நண்பரிடம் ரெஜினா தகவல் தெரிவித்ததையடுத்து மர்ம நபர்களை அவர் துரத்தி சென்றார்.

 

அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் அவர்கள் டீசல் நிரப்பி கொண்டிருந்ததை அறிந்து அங்கு சென்ற ரெஜினாவின் அந்த காரின் சாவியை எடுக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் அவரை தள்ளிவிட்டு காருடன் தப்பிச் சென்றனர். இந்த பரபரப்பு சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


Leave a Reply