--- --:--:-- --

“பிளாஸ்டிக் எனும் அரக்கனுக்கு மாற்றாக பயோபிளாஸ்டிக்”அரசுப்பள்ளி மாணவி சாதனை!

9

சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் அபாயகரமான காரணிகளில் ஒன்று பிளாஸ்டிக். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் பயோ பிளாஸ்டிக்கை கண்டறிந்து சாதனை படைத்துள்ளார் அரசுப்பள்ளி மாணவி. மனித கண்டுபிடிப்பில் உருவான ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவித்து வருவது பிளாஸ்டிக்.

 

நிலத்தில் மக்காமல் இருக்கும் பிளாஸ்டிக் நிலத்தடி நீர் மட்டத்தை சேமிக்க முடியாமல் போவதற்கு காரணமாகி நீர்வாழ் உயிரினங்கள் அழியும் நிலைக்கு காரணமாகியுள்ளது. இப்படி உயிர் சூழலுக்கு ஆபத்தாக உள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இதற்கு வலுசேர்க்கும் வகையில் பயோ பிளாஸ்டிக்கை கண்டறிந்து அசத்தியுள்ளார் தஞ்சையை சேர்ந்த அரசு பள்ளி மாணவி. பாப்பநாடு பகுதியை சேர்ந்தவர் மாணவி அர்ச்சனா. இரட்டை குழந்தைகளில் ஒருவரான அர்ச்சனா தந்தை சிவானந்தன் இறப்பிற்குப் பிறகு தாயாரின் பராமரிப்பில் வளர்த்து வந்துள்ளார்.

 

ஏழ்மையான சூழலில் வளர்ந்த மாணவி அர்ச்சனா தற்போது பாப்பநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். பசு மாட்டின் வயிற்றில் இருந்து 100 கிலோ அளவிற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலம் பிரித்தெடுக்கப்பட்ட செய்தி வெளியானதை அறிந்த மாணவி மக்காச்சோள மாவு மற்றும் வினிகர் ஆகியவற்றை கொண்டு பயோ பிளாஸ்டிக் கண்டுபிடிப்பில் ஈடுபட்டார்.

 

ஆசிரியரின் ஊக்கத்தால் அவர் கண்டறிந்த பயோ பிளாஸ்டிக் கரூரில் நடந்த அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை பெற்றதுடன் அகில இந்திய அளவில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கவும் தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. தமிழக அரசு முடிவை செயல்படுத்த எண்ணி தாம் இதனை கண்டுபிடித்து உள்ளதாகவும் பெருமிதம் தெரிவிக்கின்றார் மாணவி அர்ச்சனா.\

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon