அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பண்பின் சிகரம், வீரத்தமிழன் உள்ளிட்ட பட்டங்கள் வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம் திருக்கோவில் தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். இதனையடுத்து ஸ்ரீமீனாட்சி அம்மன் திருக்கோவில் சொசைட்டி, ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பாக விழா நடைபெற்றது.
அதில் டெக்சாசின் டெபோர்லெண்ட் மேயர் ட்ராம்ப்ரெட் நவம்பர் மாதம் 14ம் தேதியை ஒபிஎஸ் டே என்று அறிவித்து கவுரவித்தார். இந்த விழாவில் தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள் என அனைவருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
பில்ட் இன்டெக் கண்காட்சி கோவை கொடிசியாவில் ஏப்ரல் 20-ல் தொடக்கம்!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்