தீபிகா – ரன்வீர் முதலாமாண்டு திருமண நாளையொட்டி திருப்பதியில் சுவாமி தரிசனம்

முதலாம் ஆண்டு திருமண நாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை தீபிகா படுகோன் தனது கணவர் ரன்வீர் சிங் மற்றும் குடும்பத்தினருடன் சாமிதரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

 

தரிசனம் முடிந்து வெளியே வந்த தீபிகா படுகோனேவுடன் அவரது ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். நாளை அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு செல்ல உள்ளனர்.

 

திருப்பதிக்கு சென்ற புகைப்படத்தை தீபிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.


Leave a Reply