தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் – அடித்து சொல்கிறார் மு.க. அழகிரி

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய மு.க. அழகிரி தமிழகத்தில், ஆளுமையான தலைமைக்கு, வெற்றிடம் உள்ளதாக ரஜினி கூறியது உண்மை தான் என்றார். அந்த வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என்று மு.க. அழகிரி குறிப்பிட்டார்.

 

அண்மையில் பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இன்னமும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வெற்றிடம் இல்லை என்றார்; இதேபோல், வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று, துரைமுருகன் தெரிவித்திருந்தது என்பது நினைவுகூறத்தக்கது.


Leave a Reply