காவல்துறையில் ஊழல் – லஞ்ச ஒழிப்புத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்
காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக உள்துறை செயலாளர் விசாரிக்க ஆணையிட்டும், இன்னும் லஞ்ச ஒழிப்புத்துறை எந்த விசாரணையும் நடத்தாமல் இருப்பதாக செய்திகள் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் காவல்துறையிலேயே ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தந்து லஞ்ச ஒழிப்புத்துறை நம்பகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலமைச்சருக்கு அரசியல்வாதி போல் பாராட்டுரை வாசிப்பதை தலைமை செயலாளர் நிறுத்திவிட்டு ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை நேர்மையாக விசாரணை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




