--- --:--:-- --

தாயும்,இளைஞரும் உறவு கொண்டபோது பார்த்த 8 வயது சிறுமி கொடூர கொலை

7

தாயின் தவறான உறவு காரணமாக அப்பாவி சிறுமி உயிரிழந்திருக்கிறார். சிறுமியை கொலை செய்த தாயின் ஆண் நண்பர் சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி வைத்த கொடுமையும் அரங்கேறியுள்ளது. பாட்டி வீட்டிற்கு சென்ற 8 வயது சிறுமி திடீர் என மாயமானார்.

 

பெற்றோர் அக்கம் பக்கத்திலும், உறவினர்கள் வீட்டிலும் தேடி பார்க்கிறார்கள். ஆனால் சிறுமியின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் பயந்துபோன பெற்றோர் காவல் நிலையம் செல்கிறார்கள். அப்போதுதான் அடுத்தடுத்த அதிர்ச்சிகள் வெளிச்சத்திற்கு வந்தன.

 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள நல்லா குண்டா பகுதியை சேர்ந்த ரமணா என்ற பெண்ணின் எட்டு வயது மகள் துவாரகா பள்ளி முடிந்து வந்ததும் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று வருவதாக புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் இரவாகியும் சிறுமி வீடு திரும்பவேயில்லை.

 

பெற்றோர் பல இடங்களில் சிறுமியை தேடியும் கிடைக்காத நிலையில் பெற்றோர் போலீசாரின் உதவியை நாடினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பல இடங்களில் தேடுகிறார்கள். மோப்ப நாய், டிரோன் கேமராக்கள் மூலமாகவும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 

அப்போது ரமணாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதையடுத்து அதிரடியாக பிரகாஷ் வீட்டிற்குள் நுழைந்து போலீசார் சோதனையிட்ட போது சிறுமி துவாரகா கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது சிறுமியின் தாயுடனான தவறான உறவு காரணமாகவே இந்த படுகொலை அரங்கேற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. சிறுமி துவாரகாவின் தாய் ரமணாவிற்கும் பக்கத்து வீட்டிலிருக்கும் பிரகாசுக்கும் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது.

 

சம்பவ தினத்தன்று தாயும் பக்கத்து வீட்டு இளைஞரும் நெருக்கமாக இருப்பதை சிறுமி பார்த்து இருக்கிறார். இந்த உறவை சிறுமி வெளியே சொல்லிவிடுவாளோ என்று அஞ்சிய பிரகாஷ் சிறுமியை கொடூரமாக அடித்துக் கொலை செய்திருக்கிறார். பின்னர் சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் சாக்குமூட்டையில் கட்டி வைத்துள்ளார்.

 

இதையடுத்து சிறுமியின் தாய் ரமணாவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் தவறான உறவு காரணமாக ஏதுமறியாத அப்பாவி சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon