தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற அலுவலகமும் வரும் என தீர்ப்பு

நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வரும் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் வரம்பிற்குள் நாட்டின் தலைமை நீதிபதி அலுவலமும் வரும் என, கடந்த 2010ல் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்ற செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

 

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான, ஐந்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது

 

அதில், தகவல் அறியும் உரிமை சட்டம் ( ஆர்.டி.ஐ.) சட்ட வரம்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 5 நீதிபதிகளில், தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். நீதித்துறையின் வெளிப்படைத் தன்மையை நிலை நிறுத்துவதற்காக இத்தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக, தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply