குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியில் குடிதண்ணீர் சேமிக்கப்படாமல் வீணாகும் அவலம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, பாண்டுகுடி ஊராட்சிக்குட்பட்ட முருகனேந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கோனேரியேந்தல் கருப்பர் கோவில் எதிர்புறம் மேல்நிலைத் தேக்க தொட்டியில் சேமித்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த மேல்நிலைத் தேக்க தொட்டிக்கு மேல் ஏற்றப்படும் குடிநீர் குழாய் தொட்டியின் மேற்பகுதியில் துருப்பிடித்து உடைந்து நீர் தேக்க தொட்டிக்குள் சேமிக்கப்படாமல் வெளியில் விழுந்து தண்ணீர் வீணாகிறது.

 

இது குறித்து இந்த கிராம மக்கள் கூறுகையில் இந்த மேல்நிலைத் தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஆனால் இந்த மேல்நிலை தேக்க தொட்டிக்கு வர்ணம் பூசி வருடாவருடம் மராமத்து பணி என்று கணிசமான தொகை கையாடல் செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

 

தமிழக அரசு நீரை வீணாக்கமல் சிக்கனமான பயன்படுத்த கூறும் நிலையில் அதிகாரிகளின் மெத்தனத்தால் ஒருவருடத்திற்கு மேலாக குடிநீர் வீணாவதை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதணை அளிப்பதாக தெரிவித்தார்கள். மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்கள்.


Leave a Reply