ஆஸ்திரேலியாவில், வரலாறு காணாத வகையில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதை பேரழிவாக அரசு அறிவித்து,நெருக்கடி நிலையையும் பிரகடனம் செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் தீ ஏற்பட்டு, மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. கொளுந்து விட்டு எரியும், அருகில் உள்ல குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவ தொடங்கி உள்ளது.
இந்த காட்டுத் தீயில் சிக்கி 4 பேர் இறந்ததாகவும், 35 பேர் வரை தீக்காயங்கள் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பரவி, பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மரங்களும், விலங்குகளும் தீயில் கருகி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில், அவசர நிலையை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காட்டுத்தீயின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியிலும் காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது.