மலைத்தேனீக்கள் கொட்டியதில் கூலித்தொழிலாளி பரிதாபமாக பலி

போச்சம்பள்ளி அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிரிஷ்ணகிரிமாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த முருகம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற கூலித்தொழிலாளி அங்குள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.

 

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மலைத் தேனீக்கள் முருகனைத் தாக்கியுள்ளது. முகம் மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் தேனீக்கள் கொட்டியதால் அங்கிருந்து தப்பிக்க விவசாய நிலத்தில் இருந்து தண்ணீர் தொட்டியில் முருகன் குதித்துள்ளார்.

 

இருப்பினும் உடலில் விஷம் ஏறி தண்ணீரிலேயே முருகன் பரிதாபமாக உயிர் இழந்தார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தேனீக்கள் கொட்டியதால் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Leave a Reply