கள் அருந்த, விற்க அனுமதி கிடையாது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்
தமிழ்நாட்டில் கள் அருந்தவும், விற்பனை செய்யவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளது.
புளிக்காத நீரா பானம் மற்றும் பதநீருக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் போதைப் பானங்களைத் தடை செய்வது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது எனவும் அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




