--- --:--:-- --

பிளாஸ்டிக் நிறுவன இயந்திரத்தில் சிக்கி 3 வயது சிறுவனின் கை துண்டானது

10

நாகர்கோவில் கோட்டார் அடுத்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வேலை செய்து வருகிறார். அவர் நேற்று தனது 3 வயது ஆண் மகனையும் வேலைக்கு அழைத்துச் சென்றிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக சிறுவனின் கை அங்கு இயங்கிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி துண்டானது.

 

 

உடனடியாக அவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு விதிகளை மீறி குழந்தையை வேலைத் தளத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதித்த மற்றும் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாத நிறுவனத்தின் உரிமையாளர் சுப்புராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon