திருவாடானை அருகே 2 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே அரும்பூர் ஊராட்சியில் உள்ள ஏழூர் கிராமத்தில் உள்ள குளம் மற்றும் கண்மாய் கரையில் நேசம் அறக்கட்டளையின் சார்பாக சுமார் 2000 பனை விதைகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் நேசம் அறக்கட்டளையின் தலைவர் கோட்டைச்சாமி, ஊராட்சி செயலர் மகேஸ்வரி, களப்பணியாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்கள் .

வரும் காலங்களில் நேசம் அறக்கட்டளை மற்றும் திருவாடானை தோட்டக்கலையும் இனைந்து இந்த ஆண்டில் 1 லட்சம் மரக்கன்று மற்றும் பனை விதைகளை நடுவதென இலக்கை நோக்கி செயல்படுத்தி வருகின்றோம் என்று கூறப்பட்டது.


Leave a Reply