சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக 20 லட்ச ரூபாய் வழங்கப்படும் : எடப்பாடி பழனிசாமி

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும், அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருச்சி நடுக்காட்டு பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுர்ஜித்தின் பெற்றோர் பிரிட்டோ,கலா மேரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

அங்கு வைக்கப்பட்டிருந்த குழந்தை சுர்ஜித்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி குழந்தை சுர்ஜித் உயிருடன் மீட்க அரசு சார்பில் முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

இதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, மற்றும் ஓஎன்ஜிசி, அண்ணாபல்கலைக்கழகம் ஆகியன சார்பில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.


Leave a Reply