நெல் கொள்முதல் நிலையங்களில் குறைகள் இருந்தால் புகார் அளிக்கலாம்: வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் விவசாயிகள் புகார் அளிப்பதற்காக புதிய வாட்ஸ்ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 9500801465 என்ற உழவர் உதவி மைய வாட்ஸ்ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் தாங்கள் நெல்லை விற்பனை செய்யும்போது பணியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டாலோ அல்லது பணம் வசூலித்தாலோ மேற்கண்ட வாட்ஸ்ஆப் எண்ணைத் தொடர்பு கொண்டு உடனடியாகப் புகார்களைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




