ஆர் எஸ் மங்கலம் அருகே மின்சார வாரிய அலுவலகம் அலட்சியத்தால் ஊழியர் பலி
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ்.மங்கலம் தாலுகா தேவன் கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணாமலைநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது வீட்டிற்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக மின்சாரம் இல்லை. இதுகுறித்து ஆர்எஸ் மங்கலம் மின்வாரிய அலுவலகத்திற்கு பலமுறை கொடுத்தும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தானே சரி செய்து விடலாம் என நினைத்து பால்ராஜ் மின்கம்பத்தில் ஏறி உள்ளார். மின் கம்பம் பழுதானது தெரியாமல் ஏறியதில் பாதி தூரம் ஏறியதும் மின்கம்பம் சாய்ந்து அதில் சம்பவ இடத்திலேயே பால்ராஜ் பலியானார். இதுகுறித்து ஆர்எஸ்மங்கலம் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். மேலும் இப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த மின் கம்பம் மட்டும் அல்லாது கிராமத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது.

எங்களது கிராமத்தில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு ஊழியர்கள் வரவே அச்சப்படுகிறார்கள் என்றும் இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் கூறியும் அதிகாரிகள் அலட்சிய போக்கையே கையாளுகிறார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தால் இவரது உயிர் பறிக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




