ஆழ்துளைக் கிணறுகளை மூடாவிட்டால் கடும் நடவடிக்கை!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகளை மூடப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுர்ஜித் தவறி விழுந்து சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை அதன் உரிமையாளர்கள் உடனடியாக மூட வேண்டும் என்றும் மூடப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் 1100 போர்வெல் கிணறுகள் மூடப்பட்டு இருப்பதாகவும் ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார் தெரிவித்தார்.


Leave a Reply