கழிவுநீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்தது. மகாராஜன், பிரியா தம்பதியின் மூன்று வயது மகள் பவளவேணி. பிரியாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குழந்தையை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு அனைவரும் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர்.
குழந்தை பவளவேணி வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக புதிதாக வெட்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்துள்ளது. இதனை யாரும் கவனிக்காத நிலையில் மழை நீர் தேங்கி இருந்த பள்ளத்தில் குழந்தை நீண்டநேரம் இருந்துள்ளது.தாய் பிரியா உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய போது குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




