ஒரே உடலில் இருவகை இரத்தம் !

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் ராமையா. இவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இயங்கி வரும் மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் இராமையா கோமா நிலைக்கு சென்றதால் ஸ்விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது அவரது உடலில் இரண்டு வகையான ரத்தம் இருப்பது தெரியவந்தது.

 

பின்னர் தவறை மறைக்க ஸ்விம்ஸ் மருத்துவமனை ராமையாவிற்கு டயாலிசிஸ் செய்ததாக ராமையா தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரி வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 

இதுகுறித்து மருத்துவமனையிடம் கேட்டபோது விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணைக்கு பின்னரே எந்த தகவலும் தெரிவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.


Leave a Reply