சுர்ஜித் உயிரைப் பறித்த ஆழ்துளை அரக்கன்..!

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்க தீவிர முயற்சிகள் கடந்த 4 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நள்ளிரவு 2.40 மணி அளவில் அவன் இறந்து விட்டதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

 

மூடப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது எப்படி என்பதை அனைவருடைய கேள்வியாகவும் உள்ளது.

மணப்பாறையை அடுத்த நடுக்காட்டு பட்டியை சேர்ந்த தம்பதி பிரிட்டோ மேரி இவர்களுக்கு சுர்ஜித் வில்சன் என்கிற 2 வயது குழந்தை உள்ளது. பிரிட்டோ ஒரு கட்டிட தொழிலாளி. அத்துடன் வீட்டு பக்கத்தில் விவசாயமும் செய்து வந்தார். பிரிட்டோ தன் வீட்டிற்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக 7 வருடத்திற்கு முன்பே வீட்டின் தோட்ட பகுதியிலேயே ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்து இருந்தார். சுமார் 600 அடி ஆழத்திற்கு அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக்கிணறு அப்போது அமைக்கப்பட்டது.

 

ஆனால் ஒரு வருடம் வரை அந்த ஆழ்துளைக்கிணறு பயன்பாட்டில் இருந்தது. இதற்கு பிறகு அதில் தண்ணீர் கிடையாது. அதனால் அந்த ஆழ்துளை கிணற்றை யாரும் பயன்படுத்த வில்லை என்பதால் அதனை மூடும் வகையில் மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியுள்ளனர்.இந்த மண்ணை வலுவாக கொட்டியதாக தெரியவில்லை.

இந்தநிலையில் அதே பகுதியில் சோளம் சாகுபடி செய்ய தொடங்கிவிட்டனர். இந்த சமயத்தில்தான் மணப்பாறையில் சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்த மழை காரணமாக ஆழ்துளை கிணற்றை மூடி இருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியதாக தெரிகிறது. அதாவது அங்கு போடப்பட்ட மண் கரைந்து உள்ளே சென்று உள்ளது. இதனால் அந்த குழி மீண்டும் திறந்து கொண்டதை யாருமே கவனிக்கவில்லை.

 

இந்த நிலையில்தான் கடந்த வெள்ளி கிழமை மாலை குழந்தை விளையாடிக் கொண்டே ஆள்துளை அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டான். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கவும் தான் அடுத்தடுத்த பணிகளும் தொடங்கியது.

 

குழந்தையை பத்திரமாக மீட்கும் நோக்கில் முதலில் குழந்தையின் ஒரு கையில் கயிறு மூலம் சுருக்கு போடப்பட்டது. மேலும் மற்றொரு கையில் கயிறு மூலம் சுருக்கு போட முற்படும்போது அது பலன் கொடுக்கவில்லை. மீண்டும் முயற்சியை மேற்கொண்ட நிலையில் குழந்தையை பத்திரமாக மீட்க அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.

 

இதனிடையே குழந்தையை மீட்க நள்ளிரவு கோவையில் இருந்து மேலும் ஒரு குழுவும் வந்து முயற்சியில் இறங்கியது. இதை தவிர குழந்தையை மீட்க மீண்டும் ஒரு பக்கவாட்டில் குழிதோண்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு அதுவும் வீணாகிவிட்டது. ஆனால் குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுள்ளது என்பது நிம்மதியான செய்தி. மீட்பு நடைபெறும் இடத்திற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் நடராஜன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் வருகை தந்தனர்.

 

இதற்கிடையே மதுரையில் இருந்து மணிகண்டன் என்பவர் குழந்தையை மீட்க கருவி ஒன்றைக் கொண்டு வந்தார். இதன் மூலமாக குழந்தை மீட்கப்படும் என்று நம்பிக்கையில் அனைவரும் இருந்த நிலையில் அதன் மூலமாக குழந்தையை மீட்க முடியாமல் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

மணப்பாறையை சேர்ந்த ஒரு குழு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த மின் மோட்டார்களை லாவகமான இயந்திரம் கொண்டு அதை கைப்பற்றி மேலே கொண்டுவருவதில் வல்லமை மிக்கவர்கள். அதனால் அவர்கள் மீட்பதற்கான பணியில் ஈடுபட்டனர்.

 

இந்த கருவியானது குழந்தையை கைப்பற்றும் வகையில் அமைந்திருக்கும். திருச்சியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் மீட்பு பணி நடைபெற்ற நாளில் மழை இல்லாமல் காணப்பட்டது. அது மிகப்பெரிய அதிர்ஷ்டமான விஷயமாக கருதப்பட்டது. மீட்புப் பணி நடைபெற்ற நிலையில் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

 

74 மணி நேரத்திற்கும் மேலான நிலையில் குழந்தையை காப்பாற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 70 அடியில் இருந்த குழந்தை சுர்ஜித் திடீரென 85 அடியில் விழுந்து விட்டான். தேசிய பேரிடர் மீட்புக் குழுவில் நடவடிக்கையை தொடர்ந்து சுரங்கம் போன்ற குழிதோண்டி குழந்தைகள் எடுக்க என்எல்சி குழு இறங்கியது.

 

தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் நவீன கருவிகளுடன் மணப்பாறை உள்ள நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தனர். இவர்களுடன் மாநில மீட்பு குழுவினரும் சேர்ந்து மீட்பு பணியில் இறங்கி இருந்தனர். குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

 

மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் இணைந்து குழந்தைகள் வெளியே கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர். குழந்தையை வெளியே கொண்டு வரும் அதிநவீன கருவிகள் உள்ளே செலுத்தப்பட்டது இதனால் சிறிது நேரத்தில் குழந்தை மீட்க்கப்படும் என்று நம்பிக்கை தகவல் கிடைத்தது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர்
தாங்கள் கொண்டுவந்த கருவிகளை கிணற்றுக்குள் செலுத்தும் முயற்சியில் இறங்கினர். குழந்தையின் தலையில் இருக்கும் மண்ணை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால் அதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் என்எல்சி குழுவினர் குழந்தையை மீட்க இன்னொருபக்கம் முயற்சி மேற்கொண்டுள்ளனர் .

 

அதாவது கிணறுக்கு ஒரு மீட்டர் அருகிலேயே சுரங்கம் போன்ற குழிதோண்டி குழந்தையை எடுக்க முயற்சி செய்துள்ளனர். இந்த 80 அடி குழியை தோண்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்றார்கள். இவர்களுடன் தனியார் அமைப்பும் இணைந்து இந்த போர்வெல் போடும் பணியில் இறங்கியது.

 

இதன் மூலம் குழந்தையை எளிதாக மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் தெரிவித்தனர். பிறகு கடலூரில் இருந்து இயந்திரம் கொண்டு வரப்பட்டு அந்த இயந்திரத்தின் மூலமாக பாறைகள் உடைக்கப்பட்டு துளையிடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

 

பாறையின் தன்மை அதிகமாக இருந்ததால் பாறையை உடைக்க கூடிய இயந்திரத்தின் பற்கள் உடைந்தது. இதனால் குழந்தைகளை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. பாறைகளை உடைப்பதால் இயந்திரத்தின் முனை அடிக்கடி மழுங்கி விட்டது
இதனால் இரண்டாவதாக ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அதன்மூலமாக துளையிடும் பணியை தொடங்கினர்.

 

குழந்தையை காப்பாற்ற குழி தோண்டப்பட்டு 3 வீரர்கள் உள் இறங்கி குழந்தையை மீட்டு வர திட்டம் இடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த இயந்திரத்தின் பாகங்களை இணைப்பதற்கு ஆறு மணி நேரமாகிவிட்டது. எனினும் இந்த இயந்திரமும் ஒரு பெரிய தோல்வியை சந்தித்தது. எனவே இயற்கையை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு மீட்புப்படையினர் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் நல்லிரவு 2.40 மணிக்கு குழந்தை உயிரிழந்ததாக வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 80 மணி நேரம் கடந்து நடந்த மீட்புபணி தோல்வியில் முடிந்துள்ளது. உடல் சிதைந்து துர்நாற்றம் வர தொடங்கிவிட்டதாக ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

 

தேசிய பேரிடர் மீட்பு படையினர் தாங்கள் கொண்டுவந்த கருவிகளை கிணற்றுக்குள் செலுத்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் என்எல்சி குழுவினர் குழந்தையை மீட்க இன்னொருபக்கம் முயற்சி மேற்கொண்டுள்ளனர் .அதாவது கிணறுக்கு ஒரு மீட்டர் அருகிலேயே சுரங்கம் போன்ற குழிதோண்டி குழந்தையை எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

 

போர்வெல், ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டு அந்த இயந்திரத்தின் மூலமாக பாறைகள் உடைக்கப்பட்டு துளையிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணி முடிவுற்று குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு உள்ளது.

 

இதனையடுத்து ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சுஜித்தின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

இதனைத்தொடர்ந்து கிறிஸ்துவ முறைப்படி சற்று நேரத்தில் சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவனது உடலுக்கு சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக சுர்ஜித் உடலுக்கு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


Leave a Reply