மன்னார்குடி அருகே இருபிரிவினரிடையே மோதல்! 7 பேர் காயம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளது ரங்கநாதபுரம். இந்த கிராமத்தை சேர்ந்த இரு பிரிவினரிடையே கடந்த சில மாதங்களாகவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கலைச்செல்வன், கமலா, வள்ளி நாதன், உள்ளிட்ட 7 பேர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

 

இதனை அறிந்து அந்த பகுதிக்கு சென்ற மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த கதிரேசன், கருணாகரன், ராஜா, கவியரசன் உள்ளிட்டோர் வழிபாடு உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த 7 பேரும் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

படுகாயமடைந்த வள்ளி நாதன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது ஒரு பிரிவினர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply