சுர்ஜித்தின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி!

சிறுவன் சுஜித் இறப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்வாக அமைந்துவிட்டது. காலை 4.30 மணிக்கு சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது. மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூறு ஆய்வு பணிகள் நிறைவடைந்து குழந்தைகளின் உடல் வெளியே வைக்கப்பட்டது.

 

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

கிட்டத்தட்ட 82 மணி நேரமாக 5 நாட்களாக கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எப்படியாவது குழந்தை சுர்ஜித்தினுடைய முகத்தை நாம் பார்த்துவிட மாட்டோமா என்று அந்த குழந்தையின் பெற்றோர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருந்தது.

 

சாதி, மத, பேதமின்றி அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தற்போது குழந்தை சுர்ஜித் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்து நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. காவல் துறையின் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் குழந்தையின் உடல் கொண்டு செல்லப்பட்டது.


Leave a Reply