தூத்துக்குடி அருகே 2 வயது பெண் குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன், நிஷா தம்பதியினரின் இரண்டு வயது மகள் சஞ்சனா. திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது.
குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் குளியலறையில் இருந்த தண்ணீர் பக்கெட்டில் சஞ்சனா தலைகுப்புற விழுந்து இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சஞ்சனாவின் தந்தை லிங்கேஸ்வரன் குழந்தையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.