உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 2 மருத்துவர்களின் உடல் நிலை பாதிப்பு

ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் ஐந்தாவது நாளாக தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஊதிய உயர்வு, பதவி உயர்வு, மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது, உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

 

கடந்த 25ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் வேலைநிறுத்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 18 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இதனால் பல்வேறு மாவட்டங்களில் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். சென்னையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

 

மேலும் சுழற்சிமுறையில் 5 மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் இரண்டு மருத்துவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடைய குறைந்தளவு மருத்துவர்களை போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply