திருப்பூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2 ம் இடம் பெற்று சாதனை

டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அவினாசி, டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அக்கினி துளிர்கள் அறக்கட்டளை, திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் ராயம்பாளையம், சிங்கை கோதாமுத்து வாத்தியார், ஆசிரியர் அவினாசியப்பர் நினைவு உடற்பயிற்சி நிலையம் சார்பில் தமிழக பாரம்பரிய கலைகளை வளர்க்கும் முயற்சியாக பள்ளி குழந்தைகளுக்கான திருப்பூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.

 

எடைப்பிரிவில், தொடுதல் முறையில் நடந்த இந்த சிலம்பாட்ட போட்டியில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 30 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 23 மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் 18 மாணவிகள் சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடி 68 புள்ளிகளை பெற்று மாவட்ட அளவில் 2 ன் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 

25 – 30 கிலோ எடைப்பிரிவில் 7 -ம் வகுப்பு மாணவி ரம்யா, 35 – 40 கிலோ எடைப்பிரிவில் 7 -ம் வகுப்பு மாணவி விணு, 42 – 46 கிலோ எடைப்பிரிவில் 11 -ம் வகுப்பு மாணவி ராமாத்தாள், 34 கிலோ எடைப்பிரிவில் 11 -ம் வகுப்பு மாணவி நர்கிஸ் பானு, 50 – 54 கிலோ எடைப்பிரிவில் 11 -ம் வகுப்பு மாணவி நர்மதா, 55 – 60 கிலோ எடைப்பிரிவில் 12 -ம் வகுப்பு மாணவி நாகேஸ்வரி ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 

அதேபோல், 25 – 30 கிலோ எடைப்பிரிவில் 6 -ம் வகுப்பு மாணவி ஆஷா, 30 – 35 கிலோ எடைப்பிரிவில் 8 -ம் வகுப்பு மாணவி ஹரிணி, 60 – 65 கிலோ எடைப்பிரிவில் 9 -ம் வகுப்பு மாணவி உம்மு குல்சும், 40 – 42 கிலோ எடைப்பிரிவில் 9 -ம் வகுப்பு மாணவி காவ்யா, 34 – 38 கிலோ எடைப்பிரிவில் 11 -ம் வகுப்பு மாணவி நிர்மலா, 42 – 46 கிலோ எடைப்பிரிவில் 12 -ம் வகுப்பு மாணவி தாரணி, 46 – 50 கிலோ எடைப்பிரிவில் 12 -ம் வகுப்பு மாணவி இலக்கியா, 34 கிலோ எடைப்பிரிவில் 12 -ம் வகுப்பு மாணவி ஸ்ருதி ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்றனர்.

 

அதேபோல் 32 – 35 கிலோ எடைப்பிரிவில் 7 -ம் வகுப்பு மாணவி தனுஷா, 35 – 40 கிலோ எடைப்பிரிவில் 8 -ம் வகுப்பு மாணவி மகேஸ்வரி, 40 – 44 கிலோ எடைப்பிரிவில் 9 -ம் வகுப்பு மாணவி ஜெய்ஸ்ரீ, 42 – 46 கிலோ எடைப்பிரிவில் 12 -ம் வகுப்பு மாணவி சுவாதி ஆகியோர் வெண்கலம் பதக்கம் பெற்றனர்.

 

இதைத்தொடர்ந்து 2 மாதத்தில் சிலம்பாட்ட பயிற்சி பெற்று மாவட்ட அளவில் 2 ம் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த சிலம்பாட்ட பயிற்சியாளர்களுக்கும் பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியை ( பொறுப்பு ) திலகவதி தலைமை தாங்கினார். டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அக்கினி துளிர்கள் அறக்கட்டளை செயலாளர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். சிலம்பாட்டத்தில் வெற்றி பெற்று பரிசுகள் வாங்கிய அனைத்து மாணவிகள் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்த தலைமை பயிற்சியாளர் ராமன், துணை பயிற்சியாளர்கள் தேவ அரசு, ஈஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் ஆசிரியை மணி நன்றி கூறினார்.


Leave a Reply