கடன் கேட்ட கஷ்டமரை கன்னத்தில் அறைவிட்ட வங்கி மானேஜர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கடன் கேட்ட வாடிக்கையாளரை வங்கி உதவி பொது மேலாளர் கன்னத்தில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் போச்சம்பள்ளி வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் கடன் கொடுக்க மறுக்கப்பட்டது. இது குறித்து வங்கி மேலாளர் முறையாக விளக்கம் அளிக்காததால் அவரை முருகேசன் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார் .

 

இதனை கண்ட வங்கி உதவி பொது மேலாளர் சீனிவாசன், முருகேசனை கன்னத்தில் அறைந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முருகேசன் தனது மனைவியுடன் வங்கி முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.


Leave a Reply