--- --:--:-- --

மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் கைரேகை விபரங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு

27

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் விபரங்கள் மற்றும் கைரேகைகளை தேசிய முகமை இடம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நீர் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்கள் மற்றும் கைரேகைகளை வரும் 30-ம் தேதிக்குள் தேசிய தேர்வு முகமையிடம் வழங்க அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

 

மேலும் நாமக்கல் மற்றும் பெங்களூர் நீட் பயிற்சி மையங்களில் இருந்து அதிக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால், வருமான வரித்துறை இயக்குனரை இந்த வழக்கில் இணைத்து நவம்பர் 4-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon