ஜெயலலிதாவின் பெயரையோ, படத்தையோ பயன்படுத்த தினகரனுக்கு, தார்மீக உரிமையில்லை : ஜெயக்குமார்

மது இல்லாத தீபாவளியைக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு வருகிற 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று தினங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த தீபாவளிக்கு ஒரு சொட்டு மதுவை கூட பயன்படுத்த மாட்டோம் என்ற வைராக்கியத்தோடு பண்டிகையை கொண்டாடுவோம் என கூறினார்.

 

அமமுக கட்சிக்கொடியின் ஜெயலலிதாவின் படத்தையோ பெயரையோ பயன்படுத்த டிடிவிதினகரன் அது தார்மீக உரிமை இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆக இரண்டு தொகுதிகளின் வெற்றி மூலம் அதிமுகவிற்கு தீபாவளி பரிசாக அளித்து இருப்பதாக குறிப்பிட்டார். ஜெயலலிதாவின் பெயரையும் படத்தையும் பயன்படுத்த தினகரனுக்கு தார்மீக உரிமை இல்லை என்பதாலேயே புகாரை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவித்தவர் கோபால் லட்சத்தீவு ரத்தனகிரி கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடலில் சிக்கிய தமிழக மீனவர்களை மத்திய அரசின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.


Leave a Reply