வெளிநாட்டில் தவிக்கும் கணவரை மீட்கக்கோரி அமைச்சர் காலில் விழுந்து கதறிய பெண்

வெளிநாட்டில் தாக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள தனது கணவரை மீட்டு தரக்கோரி அமைச்சரின் காலில் விழுந்து பெண் ஒருவர் அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவருக்கு திருமணமாகி ஜெயப்பிரதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வரும் தங்கதுரையை சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. அப்போது தங்கதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது போல் புகைப்படம் ஒன்றை அவரது உறவினர் வாயிலாக அனுப்பியது கண்டு ஜெயப்பிரதா அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது குழந்தைகளுடன் ஜெயப்ரதா வந்தார். அப்போது அங்கு வந்த அமைச்சர் பாஸ்கரனிடம் தனது கணவரை மீட்டுத் தரக்கோரி அவரது காலில் விழுந்து அழுதார். உடனே அவரை சமாதானப்படுத்தி, பிரச்னையை கேட்டறிந்த அமைச்சர் பாஸ்கரன், உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Leave a Reply