ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவம்பர் 13ஆம் தேதி வரை தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றதற்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு வழக்கு தொடுத்தார்.
அதில் தபால் வாக்குகள் 203 மற்றும் கடைசி 3 சுற்றில் மின்னணு இயந்திரம் வாக்கு பதிவுகளை தணிக்கைக்கு உட்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக இன்பத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது மூன்று வாரங்களாக விசாரிக்கப்பட்டது.

உடனடியாக விசாரிக்க அப்பாவு தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது இதனை ஏற்று உச்ச நீதிமன்றம் வரும் நவம்பர் 13ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் அதுவரை மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






