தமிழக அரசு பள்ளிகளில் யோகா உள்ளிட்டவற்றை செயல்படுத்த புகழ்பெற்ற கைவல்யதாமா நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மும்பையில் உள்ள கைவல்யதாமா நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முதன்மை செயலாளர் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கைவல்யதாமா நிறுவனத்துடன் தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா உள்ளிட்டவைகளை கற்றுத்தர பள்ளிக்கல்வித்துறை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஞாபகசக்தி திறன் உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவை மேம்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.