சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அரசு மருத்துவமனை முதல் புதிய பேருந்து வரை பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அவ்வழியாக சைக்கிள்களில் பள்ளி செல்லும் மாணவர்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

விபத்துகளிலும் சிக்குகின்றனர் இது குறித்து பலமுறை பேருராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கற்களை போட்டு தற்காலிகமாக சீரமைக்கப்படுவதால் அது இரண்டு மாதங்களில் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. தற்போது மழை காலம் தொடங்கி உள்ள நிலையில் மீண்டும் சேதமான சாலையை கற்களை போட்டு தற்காலிகமாக சீரமைக்காமல் நிரந்தரமாக சாலையை சீரமைக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply