“திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்”:சி.வி.சண்முகம்

இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது என்றும் மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளனர் என்றும் கூறினார்.

 

மேலும் பொய் பித்தலாட்டம் பேசிவரும் திமுகவினர் இடைத் தேர்தல் மூலம் மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர். எந்த குழப்பமும் இல்லாமல் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற தீர்ப்பை மக்கள் அளித்துள்ளனர் என்றும் அமைச்சர் சிவி சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply