சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி 10 கோடி மோசடி!

சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் ஒரு தம்பதியினர். கோவை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மகேஸ்வரி அதை பகுதியில் தன வரிசை என்ற பெயரில் டூர் டிராவல்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனம் மூலம் சீரடி கோவா மும்பை அந்த பகுதிகளுக்கும் சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும் இதற்காக பல்வேறு சலுகைகள் அளிப்பதாகவும் கவர்ச்சிகரமான திட்டங்களை அழைத்தனர்.

 

இதனை நம்பி ஏராளமானோர் சுற்றுலா செல்வதற்கான நிறுவனத்தில் பணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தனர் இந்த நிலையில் இந்த நிறுவனம் மூடப்பட்டது மேலும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான சுரேஷ்குமார் அவரது மனைவி மகேஸ்வரி தலைமறைவாகினர். சுற்றுலா செல்ல முன்பதிவு செய்தவர்கள் எவ்வளவு முயன்றும் அவர்களை தொடர்பு கொள்ளவே முடியவில்லை தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்தவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

 

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது சுரேஷ்குமார் சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி 600க்கும் மேற்பட்டோர் இடம் பணம் வசூலித்து 10 கோடிக்கும் மேலும் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

சுரேஷ்குமார் மகேஸ்வரியும் சென்னையில் பதுங்கி இருப்பதாக முதலில் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அவர்கள் இருவரும் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கேரளாவுக்கு சென்ற தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தனிப்படை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி 600க்கும் மேற்பட்டோர் இடம் 10 கோடி ரூபாய் அளவுக்கு பணம் வசூலித்து கணவனும் மனைவியும் மோசடி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply