திருவாடானையில் அரசு மதுபான கடையில் பார் கிடைக்காத விரக்தியில் அரசு மதுபான கடை முன்பு யாரும் செல்ல முடியாத அளவிற்கு பள்ளத்தை தோண்டி சீமைத் கருவேல மர முட்களை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை மேற்கு தெரு மாரியம்மன் கோவில் அருகே அரசு மதுபான கடை என் 70 35 உள்ளது. இந்த கடை முன்பாக விருவாடாளை பெரிய கோவிலுக்க சொந்த இடம் உள்ளது. இந்த இடத்தை குத்தகைக்கு பயன்படுத்தி வந்தார். ஏற்கனவே அந்த இடத்தில் பார் நடத்தி வந்தார். தற்போது இந்த பார் நடத்துவதில் கடும் போட்டி நிலவு வந்தது. இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க நபருக்கு மதுபான கடை பார் கிடைத்து.
ஏற்கனவே பார் நடத்தி வந்த நபர் தனக்கு கிடைத்ததால் ஆத்திரமுற்ற அந்த நபர் திருவாடானை அரசு மதுபான கடை முன்பு யாரும் செல்ல முடியாத அளவிற்கு தான் குத்தகைக்கு எடுத்த இடத்தில் பெரிய பள்ளத்தை ஜேசிபி எந்திரத்தை வைத்து தோன்டி அதில் சீமைக்கருவேல் முள் மரங்களை வெட்டி போட்டு அடைத்து விட்டார். இன்று 12 மணிக்கு கடைக்கு வந்த அரசு மதுபான கடை ஊழியர்கள் இந்த செயலை கண்டு அதிர்ச்சி அடைந்து திருவாடானை காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர் அதன்பேரில் திருவாடானை காவல் நிலையத்தார் அரசு மது பான கடைக்கு முன் பள்ளம் தோண்டி முட்களை போட் நபர் பற்றி விசாரித்து வருகிறார்கள்.