தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் !!!

கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இடைதேர்தல் வெற்றி வரலாற்று சிறப்பு சரித்திரம் வாய்ந்த வெற்றியாக கருதுகின்றோம். ஏற்கனவே,நடைபெற்ற நாடாளுமன்ற ,சட்டமன்ற தேர்தல்களில் பொய்யான வாக்குறுதியை திமுக கூட்டணி் தலைவர்கள் க கொடுத்து வெற்றி பெற்றனர். இப்போது மக்களுக்கு உண்மை தெரிந்துவிட்டதால் அதிமுக கூட்டணியை வெற்றி பெற வைத்திருக்கின்றனர் என தெரிவித்தார்.

 

அதிமுக ஆட்சியில் மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம் எனவும் ,தொடர் செயல்பாடுகளால் பல விருதுகளையும் பெற்று இருக்கின்றோம் என தெரிவித்தார். மேலும்,சட்டம் – ஒழுங்கு சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்து வருவதாகவும், தொழில் செய்வதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் உகந்த சூழல் இருப்பதால் சமீபத்தில் நடந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு தொழில் துவங்க தொழிலதிபர்கள் முன் வந்து இருப்பதாகவும் , அவை தற்போது துவக்க நிலையில் இருப்பதாகவும்,
தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

 

திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைதேர்தலில் அளித்த பொய்யான வாக்குறுதி மக்களிடம் எடுபடவில்லை எனவும் தெரிவித்தார்.மக்களிடம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளித்தார்கள்.இதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள் எனவும் தெரிவித்தார்.இந்த தேர்தல் வெற்றி மூலம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள் பொய் வாக்குறுதி கொடுக்க கூடாது என எச்சரிக்கை மணி எழுப்பியிருக்கின்றனர் என தெரிவித்தார்.

 

உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தெரிவித்த அவர் உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்தார்.டெங்குவை தடுக்க பொதுமக்களும் வீடுகளில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர் அரசு மருத்துவமனைகளை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அ.தி.மு.க – வை வெற்றி பெறச்செய்த மக்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


Leave a Reply