அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை!

அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் மத்திய கிழக்கு கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகும்.

 

அதனை தொடர்ந்து புயலாகவும் பெற வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டார். அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்தார்.


Leave a Reply