சிறப்பாக பணியாற்றிய காவல் துறையை சேர்ந்த 604 பேருக்கு பதக்கங்கள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார் சிறப்பாக பணிகளை மேற்கொண்ட காவலர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக குடியரசுதலைவர் பதக்கங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் ஆகியவை வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். வழக்கமாக வழங்கப்படும் பதக்கங்களுடன் அத்திவரதர் வைபவத்தில் 48 நாட்கள் தொடர்ந்து பாதுகாப்பு அளித்த 60 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக அத்திவரதர் சிறப்பு பணி பதக்கம் டிஜிபி திரிபாதி வழங்கப்பட்டது பிறகு பேசிய முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்து வருவதற்கு காவல் துறையில் சிறப்பான செயல்பாடு காரணம் என்று பாராட்டினார்.
மேலும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பின்போது தமிழ்நாடு காவல்துறையின் பாதுகாப்பின் வியூகங்களை கண்டறிந்து அனைவரும் வியந்து போனதாகவும் தெரிவித்தார் விழாவில் நடைபெற்ற காவல்துறையினரின் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.