--- --:--:-- --

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை

10

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் கடந்த 21 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது 235 பெண்கள் உட்பட 1237 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 

ஆளும் பாஜகவும் சிவசேனாவும் ஒரு கூட்டணியாகவும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மற்றொரு கூட்டணியாகவும் களமிறங்கின பாஜக 152 இடங்களிலும் சிவசேனா 124 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் காங்கிரஸ் 145 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 123 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

 

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமாக 60 புள்ளி 8 3 சதவீதம் வாக்குகள் பதிவாகின வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதேபோல் 90 தொகுதிகள் கொண்ட அரியானா சட்டமன்றத் இருக்கும் கடந்த திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஜனநாயக ஜனதா கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன.

 

ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டுகின்றன முந்தைய தேர்தலில் 19 இடங்களை வென்ற இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் முக்கிய போட்டியாளராக களத்தில் உள்ளது. மொத்தம் 105 பெண்கள் உட்பட 1169 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர் தேர்தலில் 28.4 7 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

 

ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால் மகாராஷ்டிரா ஹரியானா தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon