கீழடியில் தோண்டத் தோண்டக் கிடைக்கும் பண்டையத் தமிழரின் வரலாறு…!

தண்ணீர் செல்வதற்கான சூடு மண் வடிகால் அமைப்புகளை பழங்கால தமிழர்கள் பயன்படுத்தி வந்தது கீழடி அகழாய்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடி கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி தொடங்கிய ஐந்தாம் கட்ட ஆய்வு பணிகள் கடந்த 13ஆம் தேதி நிறைவடைந்தது. இதுவரை தண்ணீர் தொட்டி மண் குழுவை சுடுமண் சிற்பங்கள் என தொள்ளாயிரத்து க்கும் அதிகமான தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

 

அதில் பண்டைத் தமிழர்கள் நீர் மேலாண்மைக்கு பயன்படுத்திய தொழில்நுட்பங்களை பறைசாற்றும் விதமாக திறந்தவெளியில் சுடுமண் வடிகால் அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவப்பு நிறத்திலான இரண்டு சுருள் வடிவ சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிய நிலையிலும் அதன் அருகிலேயே மேலும் கீழும் வாங்க பொருந்திய இரண்டு குழாய்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குழாயின் ஒரு முனையில் வடிகட்டி ஒன்றும் இருந்துள்ளது.

 

அதன் தொடர்ச்சியாக இரண்டு அடுக்குகளை கொண்ட நீர் சேமித்து வைக்கும் பாறைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட ஆய்வின் போது கண்டெடுக்கப்பட்ட தொட்டி மற்றும் சென்ட்ரல் கட்டுமான பணிகளின் தொடர்ச்சி இந்த சுடுமண் வடிகாலமைப்பு அடுத்த கட்ட ஆய்வின் போதே இதன் தொடர்ச்சி தெரியவரும் என கூறப்படுகிறது. தோண்ட தோண்ட கிடைக்கும் பழமை வாய்ந்த பொருட்கள் சங்ககாலத் தமிழர்களின் நாகரிகத்தையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் உலகிற்கு பறை சாற்றுகின்றன.
.


Leave a Reply